Home /News /tamil-nadu /

சென்னையில் புத்தகக் காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

சென்னையில் புத்தகக் காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சி

அடுத்த ஆண்டில் இருந்து சென்னை புத்தகக் காட்சிக்கு தமிழக அரசு சார்பில் 75 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 43வது புத்தகக் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், மாஃபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து புத்தக அரங்குகளை அமைச்சர்களுடன் அவர் பார்வையிட்டார். கீழடி ஈரடி என்ற பெயரிலான தொல்பொருள் கண்காட்சியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த ஆண்டில் இருந்து சென்னை புத்தகக் காட்சிக்கு தமிழக அரசு சார்பில் 75 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.

    வரும்21ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் புத்தகக் காட்சியில் 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



    வேலை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நுழைவுக் கட்டணம் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கும், மெட்ரோ ரயில் பாஸ் உள்ளவர்களுக்கும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




    செய்திகளை உடனுக்குடன் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப்இன்ஸ்டாகிராம், ஹெலோ, ஷேர்சாட், டிக்டாக் சமூக வலைதளங்களிலும் காணலாம்


    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Book Fair, Chennai book fair

    அடுத்த செய்தி