Home /News /tamil-nadu /

விடுமுறை நாளில் புத்தகக் காட்சியில் குவிந்த மக்கள்... தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதை நூல் வெளியீடு

விடுமுறை நாளில் புத்தகக் காட்சியில் குவிந்த மக்கள்... தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதை நூல் வெளியீடு

விடுமுறை நாளில் புத்தகக் காட்சியில் குவிந்த மக்கள்... தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதை நூல் வெளியீடு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    43வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கி இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் வார விடுமுறை நாளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழச்சி தங்கப் பாண்டியனின் கவிதை வெளி உட்பட 25த்திற்கும் அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டன.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் YMCA மைதானம்தில் 750க்கும் அதிகமான அரங்குகளில் 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்களோடு புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி புத்தகக் காட்சி தொடங்கிய நிலையில் இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் கூட்டம் களைகட்டியது.

    புத்தக விழா அரங்கில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் கவிதை நூல்கள் குறித்து இலக்கியவாதிகள் தமிழவன், ஜமாலன் உள்ளிட்டோர் எழுதிய விமர்சன கட்டுரைகள் வெளியிடப்பட்டது. கவிஞர் அமிர்தராஜ் தொகுத்த கவிதை வெளி என்ற அந்த புத்தகத்தை கவிஞர் இந்திரன் வெளியிட முதல் பிரதியை பேராசிரியர் குமரவேல் பெற்றுக்கொண்டார்.

    இதே போல் 117 எழுத்தாளர்கள் எழுதிய 117 சிறுகதைள் தொகுப்பு அடங்கிய கதைக்கோவை நூலினை நடிகர் சிவகுமார் வெளியிட்டார்... இதனுடன் 25க்கும் அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டன.

    மறுபுரம் கருத்துரையாளர்களின் சிந்தனையரங்கு, குறும்பட திரையிடல் என 43 வது சென்னை புத்தகக் காட்சி அறிவு பசிக்கு விருந்து படைப்பதாகவே அமைந்துள்ளது.
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Chennai book fair

    அடுத்த செய்தி