சென்னையில் உள்ள முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி , இதனால் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதலமைச்சர் வீட்டில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இதனையடுத்து வெடிகுண்டு விடுத்த நபர் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜ் என்பது தெரியவந்தது. மது போதையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: வெள்ளியங்கிரியில் 7 மலை ஏற்றம்.. 22 மணிநேரம் நடை பயணம் செய்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
இதனையடுத்து ஆழ்வார்குறிச்சி போலீசார் ஆரோக்கியராஜ் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதேபோல், நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் கஞ்சா போதையில் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.