நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ரஜினிகாந்த் வீட்டில் தீவிர சோதனை
  • News18
  • Last Updated: June 18, 2020, 2:39 PM IST
  • Share this:
நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் 108-க்கு போன் செய்து கூறியுள்ளார். இதை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்தனர்.

இந்த சோதனைக்கு பின் வீட்டில் வெடிகுண்டும் ஏதும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்த மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதுபோன்று ஏற்கனவே ரஜினி வீட்டிற்கு மிரட்டல் விடுத்த நபர் மீண்டும் மிரட்டி உள்ளது தெரியவந்துள்ளது.


 
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading