ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காவல் நிலையத்திலேயே குண்டுவெடிப்பு... விருதுநகரில் பரபரப்பு...

காவல் நிலையத்திலேயே குண்டுவெடிப்பு... விருதுநகரில் பரபரப்பு...

கோப்புப்படம்

கோப்புப்படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டை செயலிழக்கச்செய்யும் போது குண்டு வெடித்து காவல்துறையினர் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் நல்ராஜ். தோட்டத்தொழியான இவர் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக மம்சாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நல்ராஜ் வேலை செய்யும் தோட்டதில் வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நல்ராஜ் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதனை தொடர்ந்து நல்ராஜை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் மம்சாபுரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்யும் போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்ததுடன் குண்டுகள் வெடித்தன.

  இதில் காவல்துறையினர் 5 பேர் காயமடைந்துள்ளனர். முருகேசன், ஏசுதாஸ், பவுன்ராஜ், வீரபாண்டி மற்றும் தேவதாஸ் சிவப்பிரகாசம் உள்ளிட்ட 5 பேரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

  First published: