• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தென் மாவட்டங்களை 20 ஆண்டுகளுக்கு மேலாக பதற்றத்திலேயே வைத்திருக்கும் நாட்டு வெடிகுண்டு

தென் மாவட்டங்களை 20 ஆண்டுகளுக்கு மேலாக பதற்றத்திலேயே வைத்திருக்கும் நாட்டு வெடிகுண்டு

கோப்புப் படம்

கோப்புப் படம்

நெல்லை, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் பல ஆண்டுகளாக நாட்டு வெடிகுண்டுகள் கலாசாரம் புழக்கத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை காணலாம்....

  • Share this:
    தூத்துக்குடியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்துவை பிடிக்க முயன்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்ரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதுவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதுபோன்ற சம்பம் புதிதல்ல என்றாலும் இந்த பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகள் மேலாகவும் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் படிக்க...நண்பனின் மனைவியுடன், ரவுடி கள்ளக்காதல்.. மாமனார் வெட்டிக்கொலை... சென்னையில் பயங்கரம்..

    இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் நடைபெற்று வருகிறது. சல்பர் குளோரைடு, சிவப்பு பாஸ்பரஸ், போன்ற வேதி பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகள் பெரும்பாலும் கூலிப்படையினர் பயன்படுத்துவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    நாட்டு வெடிகுண்டில் 100 சிறிய அளவிலான ஆணிகள் அல்லது குண்டுசிகள் பயன்படுத்தப்படுதாகவும் இதை எதிரிகளின் மீது வீசும்போது வெடித்து சிதறி அதில் இருக்கும் ஆணிகள் வயிறு முகம் பகுதியை சிதை்து விடும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிக்க...விரும்பிய அரசு கல்லூரி கிடைக்கவில்லையா... கவலை வேண்டாம்...! அரசின் புதிய திட்டம் தெரியுமா...?

    கடந்த 1996ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தில் நடைபெற்ற சாதி கலவரத்தில் பெருமளவு நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதே போல் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த நேரத்தில் கூத்தன்குழி கடற்கரை மணற் பரப்பில் பதுக்கி வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

    2010ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காவல் ஆய்வாளர் வெற்றிவேல் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் அவர் உயிரிழந்தார். அதன்பின் காவல்துறையினரின் கடும் நடவடிக்கையால் தென்மாட்டங்களில் சில ஆண்டுகள் நாட்டுவெடிகுண்டு கலாசாரம் கட்டுக்குள் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சம்பவத்தால் தென்மாவட்டங்களில் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் முழுமையாக அகற்றப்படவில்லை என்பது நிரூபணமாகி உள்ளதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

    மேலும் படிக்க...காதலுக்கு தந்தை எதிர்ப்பு.. திருப்பூரில் 17 வயது சிறுமி தற்கொலை

    இதனை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்காவிட்டால் இப்பகுதிகளில் மீண்டும் ஒரு கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: