இரு விழிகளிலும் பார்வை இல்லை... விசில் சத்தத்தில் கிராமத்தையே பாதுகாக்கும் முதியவர்...!

இரு விழிகளிலும் பார்வை இல்லை... விசில் சத்தத்தில் கிராமத்தையே பாதுகாக்கும் முதியவர்...!
News18
  • News18
  • Last Updated: December 7, 2019, 2:47 PM IST
  • Share this:
இரு விழிகளை இழந்த முதியவர் விசில் சத்தத்தில் கிராமத்தையே பாதுகாத்து நிர்வகித்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் வட்டத்திற்குட்பட்ட சல்லிசெட்டிபட்டி கிராமம். 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்திளை ஆண்கள் பெரும்பலோனர் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் ஜவுளிவியாபாரம் செய்து வருகின்றனர்.

தைப்பொங்கல், கோயில் திருவிழா, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு தான் அனைவரும் ஊரில் இருப்பது வழக்கம். இந்த சூழ்நிலையில் இரு விழிகளை இழந்த ஒரு முதியவர் விசில் சத்ததில் கிராமத்தினை பாதுகாத்து நிர்வாகம் செய்து அசத்தி வருகிறார்.


66 வயதாகவும் அந்த பார்வையிழந்த மாற்றுத்திறானாளி முதியவர் பெயர் பரமசிவம். சிறு வயதில் தனது இரு விழிகளும் பார்வை இழந்து விட, 30 வயதில் அவரது பெற்றோர்கள் இறந்த விட, அதன் பின்னர் அவருக்கு இந்த கிராமம் தான் உலகம்.

கிராமத்தில் தண்ணீர் விநியோகம் முதல் கோவில்களை பாரமரிப்பு வரை செய்ய தொடங்கிய முதியவர் பரமசிவம், கிராமத்தின் மடத்தில் இருக்கும் மை செட்டை, யாருடைய துணை இல்லாமல் அவரே ஆன் செய்து ரேசன் கடைகளில் பொருள்கள் விநியோகம், உதவி தொகை வழங்கப்படும் நாள், கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும் விழாக்கள் என அனைத்தையும் தகவல் தெரிவித்து ஒருங்கிணைப்பு செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

பகல் முழுவதும் ஊரை சுற்றி வலம் வரும் முதியவர் பரமசிவம் இரவு நேரங்களில் அங்குள்ள மடத்தில் தூங்குவது தான் வழக்கம், ஏதேனும் அந்நியர் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக, தான் வைத்திருக்கும் விசிலை எடுத்து ஊதி எச்சரிக்கை செய்து விடுவார். இதனால் இவரை மீறி வெளிநபர்கள் உள்ளே வர முடியாது

20 வருடங்களாக இளைஞரணி தொடங்கி, மாத சீட்டும் நடத்தி வரும் முதியவர் பரமசிவம், மாத மாதம் சீட்டு பணம் வசூல் பண்ணி, சீட்டு குலுக்கி எடுப்பது, கோவில் திருவிழா தலைக்கட்டு பணம் வசூல் பண்ணி கொடுப்பது என எல்லாமே அவர் தான், பார்வையிழந்தாலும் பணத்தினை லாவகமாக எண்ணுவது மட்டுமின்றி, செல்போனை எளிதில் பயன்படுத்தி அசத்தி வருகிறார்.காலை முதல் மாலை வரை ஊரைச் சுற்றி வரும் முதியவர் பரமசிவத்திற்கு அப்பகுதியில் செல்லும் பஸ்களின் நேரமும் அத்துப்படி, தனக்கு வந்த உதவி தொகையில் 60 ஆயிரம் ரூபாய் செலவில் அங்குள்ள கோவிலுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வசதி ஏற்படுத்தியுள்ளார். மொத்ததில் தங்களது கிராமத்திற்கு எல்லாமே அவர் தான், தங்களது பாதுகாவலர் என்கின்றனர் கிராம மக்கள்.

இது குறித்து முதியவர் பரமசிவத்திடம் கேட்ட போது பார்வையில்லை என்று கவலைப்பட்டது கிடையாது என்றும், எனது கிராம மக்கள் என் மக்கள், என்னால் அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்து வருவதாகவும், மக்களும் தன்னிடம் அன்பு காட்டி வருவதாகவும், தன்னுடைய உடல் குறைக்கு இறைவன் தான் காரணம் என்றும், மகிழ்ச்சியுடன் பணிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.

விழிகளால் இந்த உலகத்தினை பார்க்க முடியவில்லை என்றாலும், தனது தன்னம்பிக்கை என்ற அச்சாணி மூலமாக உலகத்தின் பார்வையை தன் மீது பார்க்க வைத்து பணியாற்றி வரும் முதியவர் பரமசிவம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறார்.
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading