பசுக்கன்றை பலிகொடுத்தால் யோகம்.. பெண்கள் வசியம்.. தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபட்ட மந்திரவாதி தலைமறைவு..

குமரி மாவட்டம் குலசேகரத்தில் யாகம் நடத்துவதாக கூறி வசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் பிடித்துள்ளார். மந்திரவாதி மோசடியில் ஈடுபட்டது உண்மையா?

  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 12:45 PM IST
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மாமூடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் பில்லி, சூனியம், ஏவல், தோஷம் கழிப்பதாக‌ கூறி அந்த பகுதி மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் பணவசூலில் ஈடுபட்டு வந்துள்ளார். அரசியல்வாதி ஒருவர் தோஷம் கழிப்பதற்காக அந்த மந்திரவாதியை தேடி அவர் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது குறி பார்த்து விட்டு பசு கன்று ஒன்றை பலி கொடுத்தால் தோஷம் நீங்கும் என்று தெரிவித்துள்ளார். அவரும் பசு கன்று வாங்கி கொடுத்துள்ளார். மந்திரவாதியை பற்றி உள்ளூரில் சிலரிடம் அரசியல் பிரமுகர் விசாரித்தபோது அவர் இது போன்று பலரிடம் பலியிட ஆடு ,கோழி, பசு கன்று முதலியவற்றை வாங்கி சந்தையில் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அவர் மந்திரவாதியை தொடர்பு கொண்டு கடிந்துள்ளார். பயந்துபோன மந்திரவாதி தலைமறைவானார். அவரது வீட்டில் கட்டி வைத்திருந்த பசு கன்று குடிநீர், உணவின்றி தவித்து இறந்துள்ளது. துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேரூராட்சி ஊழியர்கள் உதவியுடன் அந்த பசு கன்றின் உடலை மீட்டு புதைத்தனர். அந்த பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.தலைமறைவான மந்திரவாதி குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் பல இளைஞர்கள், பெண்களிடம் வசியம் செய்வதாகக்கூறி 10,000 முதல் 20,000 வரை பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது.

மேலும் படிக்க...சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: மாநகராட்சி அறிவிப்புஇதை அடுத்து அவரிடம் யாராவது பணத்தைக்கொடுத்து ஏமாந்திருந்தால் புகார் அளிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். யாரும் புகார் அளிக்க முன்வராதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading