தேர்தல் பிரச்சாரத்தின் போது தோசை சுட்டு அசத்திய குஷ்பு!

குஷ்பு

தேர்தல் பிரச்சாரத்தின் போது உணவகம் ஒன்றில் பாஜக வேட்பாளர் குஷ்பு தோசை சுட்டுக் கொடுத்து கவனம் ஈர்த்தார்.

  • Share this:
திமுகவின் கோட்டையாக வர்ணிக்கப்படும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனுக்கு போட்டியாக அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.

திமுக, காங்கிரஸ் என கடந்த பத்தாண்டுகளாக பயணித்து வந்தாலும் முதல் முறையாக தேர்தல் அரசியலில் அவர் அடியெடுத்து வைத்திருப்பது இந்தத் தேர்தலில் தான். எனவே வெற்றிக்கனியை பறிக்கும் உத்வேகத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர்.

இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியின் நுங்கப்பாக்கம் பகுதியில் உள்ள வடக்கு மாட வீதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த குஷ்பு, திடீரென அங்கிருந்த உணவகம் ஒன்றில் திடீரென நுழைந்து தோசை சுட்டு ஆச்சரியப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

உணவகத்தில் தோசை சுடும் குஷ்பு


வந்தோம், வாக்கு சேகரித்தோம் சென்றோம் என்றில்லாமல் குஷ்பு திடீரென தோசை சுட்டதை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் அவரை பார்த்து ரசித்தனர்.

முன்னதாக குலாம் அபாஸ் அலிகான் 7வது தெருவில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்த குஷ்பு அங்குள்ள இஸ்லாமிய தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்து தேனீர் போட்டுக் கொடுத்து அசத்தினார்.

புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்த ஒருவர் தங்கள் பகுதியில் எளிமையாக இறங்கி வேலை செய்வதை பார்த்து வாக்கு சேகரிக்க வரும் குஷ்புவுக்கு பொது மக்களும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2010-ம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு, ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று முடிவு செய்துவிட வேண்டாம் என பேசியது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சோனியா, ராகுல் முன்னிலையில் காங்கிரசில் ஐக்கியமானார்.

காங்கிரஸ் கட்சியின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தமக்கு அழைப்பு விடப்படுவதில்லை என பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய குஷ்பு, அதனை தொடர்ந்து மறுத்து வந்தவர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
Published by:Arun
First published: