Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... காத்திருக்கும் பாஜக... காரணம் என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... காத்திருக்கும் பாஜக... காரணம் என்ன?

அண்ணாமலை ஈரோடு கிழக்கு

அண்ணாமலை ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட நினைத்து முனைப்பு காட்டினாலும், அது தொடர்பான அறிவிப்பை இதுவரை வெளியிடாதது ஏன் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, பணிகளை தொடங்கிய பாஜக, இந்த தேர்தலில் களமிறங்கியே ஆக வேண்டும் என திட்டமிட்டது. ஆனால், கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில், இம்முறை தாங்கள் போட்டியிட வேண்டும் என முடிவு செய்த அதிமுக, அது தொடர்பாக ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசியது.அவரும் அதை ஏற்றுக் கொண்டு அதிமுகவுக்கு ஆதரவை தருவதாக அறிவித்தார். இதையடுத்து, அதிமுக - பாஜக இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், திமுகவை எதிர்த்து களம் காண அதிமுக மட்டுமே பெரிய கட்சி என்ற கருத்து பாஜகக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அதிமுகவில் தற்போது நிலவும் பிரச்சனைகள் குறித்தும், குறிப்பாக இரட்டை இலை சின்னம் ஒரு பெரிய சவாலாக அமையும் என்பது குறித்தும் பாஜக கூறியுள்ளது. இதனால், அதிமுக தங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என பாஜக கூறியதாகவும், ஆனால், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர், முழு மனதுடன் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இந்த நெருக்கடி நிலை தொடர்பான முழு விவரங்களையும், தேசிய தலைமையிடம் அண்ணாமலை தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் அதிமுகவுக்கு ஆதரவா அல்லது தனித்துப் போட்டியா என்ற அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. கூட்டணியில் சிக்கல் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக அதிமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளதால், கடைசி நேரத்தில் ஏன் அபாயகரமான முயற்சியை எடுக்க வேண்டும் என்றும்,

முன்னதாகவே பாஜக போட்டியிட்டால் இந்த பிரச்சினை இருக்காது என்ற கருத்தும் அதிமுக முன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அதிமுக கொடுக்கும் சமிக்ஞையை வைத்து முடிவெடுக்கலாம் என பாஜக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பாஜகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: AIADMK, BJP, Erode Bypoll