ஆளுங்கட்சியினரிடமே சுங்கக்கட்டணமா? சுங்கச்சாவடியில் பாஜக மகளிர் அணி தர்ணா..

பாஜக மகளிர் அணியின் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் வசூலிக்காமல் அவர்களை அனுப்பி வைத்தனர்.

ஆளுங்கட்சியினரிடமே சுங்கக்கட்டணமா? சுங்கச்சாவடியில் பாஜக மகளிர் அணி தர்ணா..
பாஜக மகளிர் அணி தர்ணா
  • Share this:
கரூரில் பா.ஜ.க மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் சுங்க வசூல் மையத்தில் பணம் கட்டாமல் சுங்கச்சாவடியில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனுஸ்மிரிதியை மேற்கோள் காட்டி, பெண்கள் குறித்து தவறாக பேசியதாக குற்றம்சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் குளித்தலை பகுதியில் இருந்து வந்த மகளிர் அணியினர் பேருந்து மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு வந்த போது ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்டுள்ளனர். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை சேர்ந்த தங்களிடமே சுங்கக்கட்டணம் கேட்பதா எனக் கூறி பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ALSO READ |  ஏமனில் உணவுக்காக கடும் நெருக்கடி.. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு - ஐ.நா.

பாஜக மகளிர் அணியின் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் வசூலிக்காமல் அவர்களை அனுப்பி வைத்தனர்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading