தமிழ்நாட்டை நாக்பூரிலிருந்து (ஆர்.எஸ்.எஸ்.) இயக்க பா.ஜ.க. விரும்புகிறது! ராகுல் காந்தி தாக்கு

நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்பதை மாநிலங்களை முடிவு செய்யலாம் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருக்கிறோம்.

தமிழ்நாட்டை நாக்பூரிலிருந்து (ஆர்.எஸ்.எஸ்.) இயக்க பா.ஜ.க. விரும்புகிறது! ராகுல் காந்தி தாக்கு
ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: April 12, 2019, 6:15 PM IST
  • Share this:
தமிழ்நாடு, தமிழர்களால் ஆளப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாடு நாக்பூரிலிருந்து இயக்கப்படவேண்டும் என்று பா.ஜ.கவினர் சொல்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகை தந்துள்ளார். அவர், கிருஷ்ணகிரி, சேலம், தேனி ஆகிய பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

சேலத்தில் பேசிய ராகுல் காந்தி, ’தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவதை எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் இணைந்திருந்து, மோடியைத் தோற்கடிப்பது நம்முடைய கடமை. அது, இந்தியாவின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல. தனி மனிதனின் சுயமரியாதையை பாதுகாப்பதற்கு அது முக்கியமானது.


நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்பதை மாநிலங்களை முடிவு செய்யலாம் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருக்கிறோம். நாங்கள் தொடர்ச்சியாக மக்கள் குரலைக் கேட்கிறோம். கருத்துப் பரிமாற்றங்களைக் கேட்கிறோம். கருணாநிதி என்பவர் சாதாரண மனிதர் அல்ல. தமிழர்களின் தேவையை ஓங்கி ஒலித்த குரலாக இருந்தார்.

கருணாநிதி இறப்பின்போது, அவரை தமிழக அரசு அவமானப்படுத்தியது, தமிழர்களையே அவமானப்படுத்தியதாகத்தான் கருதுகிறேன். தமிழ்நாடு, தமிழர்களால் ஆளப்பட வேண்டும். தமிழ்நாடு, நாக்பூரிலிருந்து இயக்கப்படவேண்டும் என்று பா.ஜ.கவினர் சொல்கின்றனர்.

இந்த மக்களவைத் தேர்தல் இரண்டு சிந்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி.பா.ஜ.க ஒரே கருத்து, ஒரு வரலாறு, ஒரே பண்பாடுதான் நாட்டின் நிலவ வேண்டும் என்று விரும்புகிறது. ஒரே கருத்துதான் நாட்டை ஆளவேண்டும் என்று கூறுகிறது. மறுபக்கத்தில் உள்ள காங்கிரஸ், தி.மு.க பன்முகத் தன்மையை வலியுறுத்துகிறது. பல்வேறு, மொழிகள், பண்பாடு நாட்டில் உள்ளது என்று வலியுறுக்கிறோம். பன்முகத்தன்மைதான் இந்தியாவை உருவாக்கியது என்று கூறுகிறோம்.

தமிழ்நாடு நாக்பூரிலிருந்து (ஆர்.எஸ்.எஸ்.) இயக்கப்படவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பிரதமர் அலுலவகம், தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பிரதமர் அலுவலக அதிகாரிகளின் குரல், தமிழக மக்களின் குரலை விட வலிமையானது என்று பா.ஜ.கவினர் கருதுகிறார்கள். தமிழ்நாடு, தமிழர்களால் ஆளப்படவேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவை கட்டமைக்கின்ற அடிப்படையாக தமிழர்களின் குரல் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ் மொழியை மதிப்பது, தமிழர்களை மதிப்பது, தமிழர்கள் கலாச்சாரத்தை மதிப்பதுதான் வலிமையான இந்தியாவைக் கட்டமைப்பதற்கான அடிப்படை என்று கருகிறோம். அதனால், இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம். அதிகாரப் பரவலாக்கம் மட்டும் எங்களுடைய நோக்கம் இல்லை. பன்முகத்தன்மைதான் நாட்டின் ஆதாரம் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading