• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அடுத்த சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - அண்ணாமலை

அடுத்த சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழகத்தில் திராவிடம் என்கிற மாயையை நிச்சயம் உடைத்துக் காட்டுவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவதற்கான முயற்சி என்ற கருத்து எழுந்துள்ளது.

    மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக "மக்கள் ஆசி யாத்திரை" மேற்கொண்டுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பூரில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது சட்டமன்ற தேர்தலில் 4 பேரை வெற்றி பெற வைத்ததாகக் கூறினார். அவர்கள் 4 பேரும் திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் குறைகளை சுட்டிக்காட்டி பேசி வருவதாகக் கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் திராவிடம் என்கிற மாயையை நிச்சயம் உடைத்துக் காட்டுவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் சூளுரைத்தார்.

    Also Read : மாநிலங்களவை தேர்தல்: மூன்று இடங்களையும் கைப்பற்றுகிறது திமுக. எப்படி தெரியுமா?

    இதேபோன்று, 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது தான் பாமகவின் இலக்கு இலக்கு என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய கூட்டணியே தொடரும் என்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இருக்காது என்றும் அவர் திட்டமிட்டமாகக் கூறியுள்ளார். இதனால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறாது என்பது உறுதியாகியுள்ளது. தற்போது பாஜகவும் 150 தொகுதிகளில் தனித்து வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளதால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்துவிடப்படுகிறதா என்று கேள்வியெழுந்துள்ளது.

    அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்து வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த கருத்து அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்டுப் பெறுவதற்காகவே அண்ணாமலை இதுபோன்று பேசி வருவதாக அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார்.

    Also Read : தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் - யாருக்கு வாய்ப்பு?

    அதிமுக வாக்கு வங்கியை பாஜக கைப்பற்ற முயற்சிப்பதாகவும், அடுத்த மக்களவைத் தேர்தல் வரை அதிமுக - பாஜக கூட்டணி தொடர வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே இவ்வாறு பேசியிருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: