பாஜக அசுர வளர்ச்சி பெறும்; அடுத்த ஆட்சி பாஜகவினுடையது: அண்ணாமலை அதிரடி!

அண்ணாமலை

மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக அண்ணாமலை இன்று சொந்த மாவட்டமான கரூர் வந்தார்.

 • Share this:
  தமிழகத்தில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பாஜக,   ஐந்து வருடத்தில் 150 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த தேர்தலில்  வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின்  மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

  கரூர் மாவட்டம் தொட்டம் பட்டியை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பிஜேபியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக அண்ணாமலை இன்று சொந்த மாவட்டமான கரூர் வந்தார்.
  நாமக்கலில் இருந்து வந்த அண்ணாமலைக்கு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, கரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  Also Read:   இஸ்லாமிய இளைஞரை மணக்க இருந்த இந்து பெண்: மூளை சலவையால் திருமணத்தை நிறுத்திய பெற்றோர்?!

  கரூர் மாவட்ட பாஜகவினரின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூர் பேருந்து நிலையம் அருகே பேசுகையில்,  இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 12வது மாவட்டம் கரூர். இதனால். 2 மணி நேரம் காலதாமதம் ஆகிவிட்டது. இதே ஊரைச் சார்ந்தவன் நான்.

  அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டேன். என்னைப் பற்றி அதிகம் தெரிந்த உங்களிடம் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை.

  Also Read:   கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் ஊர்வலமாக கூட்டிச் சென்ற கணவர் குடும்பத்தினர்!

  தமிழகத்திலுள்ள 13,000 கிராமங்களுக்கும் பாஜகவின் கொடி,  கொள்கைகளை, சித்தாந்தத்தை உங்கள் ஒத்துழைப்போடு எடுத்துச் செல்ல வேண்டும்.  கரூர் மாவட்டத்தில் பாஜக அசுர வளர்ச்சி பெறும். ஆறு மாதத்தில் நீங்கள் அதை பார்ப்பீர்கள். கரூர் மாவட்டம் வித்தியாசமான மாவட்டம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆகவே, கரூரில் பாஜகவின் அரசியலும் வித்தியாசமாக இருக்கும். தமிழகத்தில்  நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட நமது கட்சி ஐந்து வருடத்தில் 150 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த தேர்தலில்  வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

  தி.கார்த்திகேயன், செய்தியாளர் கரூர்,
  Published by:Arun
  First published: