முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த ஆட்சியில் தமிழக அமைச்சரவையில் பா.ஜ.க இடம்பெறும் - எல்.முருகன் உறுதி

அடுத்த ஆட்சியில் தமிழக அமைச்சரவையில் பா.ஜ.க இடம்பெறும் - எல்.முருகன் உறுதி

தமிழக பாஜக தலைவர் முருகன்

தமிழக பாஜக தலைவர் முருகன்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பா.ஜ.க இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும். அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம் பெறும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

தமிழ்க் கடவுள் முருகனை யூ.ட்யூப் வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பா.ஜ.கவினர் தங்களது வீடுகளில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் அறிவித்திருந்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள எல்.முருகன் இல்லத்தின் முன்பு பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், சமூக வலைதளத்தில் முருகக்கடவுள் குறித்து ஆபாசமாக சித்தரித்தவர்கள் அனைவரையும் கைது செய்வதோடு அந்த யூ.டியூப் ஊடகத்தை தடை செய்ய வேண்டும் என்றார். இந்த யூ.டியூப் ஊடகத்தின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், முருகக் கடவுளை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார். மேலும் அந்த வலைத்தளத்தில் உள்ள அனைத்து காணொளிகளையும் நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் தற்போது சில கோவில்களில் அர்ச்சனை, மந்திரங்கள் தமிழில் சொல்லப்படுவதாக குறிப்பிட்ட அவர், அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை பா.ஜ.க வும் விரும்புகிறது என்றார்.

top videos

    தொடர்ந்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘தமிழகத்தில் அடுத்த ஆண்டு பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பா.ஜ.க இடம்பெறும்’ என்று தெரிவித்தார்.

    First published: