• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரதமராக மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை

பிரதமராக மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

பிரதமராக மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மோடி அரசின் 7 ஆண்டுகள் சாதனைகளை ஆவணப்படுத்தும் விதமாக சிறப்பு மலர் வெளியிட்டப்பட்டது. இதனை மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட நடிகர் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் பெற்றுக்கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அண்ணாமலை, எந்த ஒரு தமிழனும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல மோடியின் பாதுகாப்பு கண்டிப்பாக தேவை. தமிழக அரசியல்வாதிகள் கோபாலபுரத்தில் இருந்து go back modi என கூறலாம்.

    ஆனால் இந்திய இராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கிய போது 24 மணி நேரம் இந்தியா கெடு விதித்தது. உடனடியாக வாகா எல்லைக்கு அபிநந்தன் கொண்டு வரப்பட்டார் என சூட்டிகாட்டிய அண்ணாமலை, ஆர்டிகிள் 370க்கு பிறகு இந்தியா அமைதியான நாடாக மாறி உள்ளது என்றார்.

    2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்வாதிகள் நிறைந்த இந்தியா செயலற்று கிடந்தது.  தற்போது ஏழு ஆண்டுகளில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தான் இந்தியன் என்று சொல்லும்போது ஒரு மரியாதை, ஒரு கொண்டாட்டம், ஒரு பயம் ஏற்படும் அளவுக்கு உதாரணமாக இருக்கிறது.

    Also Read : குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக் டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை

    பிரதமராக மோடி இருக்கும்போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் பாஜக தமிழகத்தில் ஒவ்வொரு பூத்தாக கோட்டையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது,  தமிழகத்தில் பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் அமரப்போவதை பிரதமர் மோடியே பார்க்கத்தான் போகிறார் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: