20 ஆண்டுகளுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் அடியெடுத்து வைக்கும் பாஜக

பாஜக

தமிழக சட்டமன்றத்திற்குள் 20 ஆண்டுகளுக்கு பின் பாஜக சார்பில் 4 வேட்பாளர்கள் அடியெடுத்து வைக்க உள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் 1996 சட்டமன்ற பொதுத் தேர்தலில், பா.ஜ.க ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அடுத்து, 2001 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற அக்கட்சி நான்கு தொகுதிகளில் வென்றது. அதன்பின் நடந்த தேர்தல்களில், பா.ஜ.,க படுதோல்வியையே சந்தித்து வந்தது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது.

  நெல்லையில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் டாக்டர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தை அலங்கரிக்க உள்ளனர்.

  தமிழகத்தில், 1996 சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அடுத்து, 2001 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

  தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே கிடையாது என்று திமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி தலைவர்கள், வெளிப்படையாக விமர்சித்து வந்த நிலையில், அதனை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் பாஜக பொய்யாக்கியுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 281 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இருப்பினும் தமிழகத்தில் பெரிய சக்தியாக காலூன்ற முயற்சித்த பாஜகவிற்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டியிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இதேபோன்று மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சுயபலத்தில் வெற்றி பெறவில்லை என்றும், அதிமுகவின் வாக்குவங்கியை பயன்படுத்தியே பாஜக வென்றிருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

  கொங்கு மண்டலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பதாகவும், இதுவே மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வெல்ல காரணம் என்றும் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: