ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஈரோடு தேர்தலில் திமுகவை பாஜக தோற்கடிப்போம் - பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்

ஈரோடு தேர்தலில் திமுகவை பாஜக தோற்கடிப்போம் - பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்

பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்

பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிப்போம் என்று பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்குத் தொகுதியில் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொகுதியில் வேட்புமனு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளும் அதற்கான பணியின் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதற்கான முயற்சியில் பாஜக இறங்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள தனியார் அரங்கில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும், சேது கால்வாய் திட்டம் அமைக்கப்படும் பொழுது ராமர் பாலம் பாதிக்கப்படாமல் அமைக்கப்பட வேண்டும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக நடந்த அராஜகத்தை கண்டித்து என்று 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also read : தமிழ்நாட்டில் பிடித்த உணவு எது? மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில்

இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்றும் திமுகவை வீழ்த்துவதே பாஜகவின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: BJP, DMK, Election, Erode Bypoll