ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாணவி பிரியா பெயரில் பாஜக சார்பில் ஃபுட்பால் போட்டி: அண்ணாமலை

மாணவி பிரியா பெயரில் பாஜக சார்பில் ஃபுட்பால் போட்டி: அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்படும் மாணவி பிரியாவின் பெயரில் பாஜக சார்பில் சென்னையில்  கால்பந்தாட்ட போட்டி நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையான மாணவி பிரியா, அரசு மருத்துமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த பிரியாவின் வீட்டுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று சென்றனர்.

  அவரது படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய அவர்கள் பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கனவை சுமந்து கொண்டு கால்பந்து வீராங்கனையாக இருந்த பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்து அதன் மூலம் காலை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

  மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக் கூடியது. தமிழ்நாட்டில்தான். மாணவி  சிகிச்சை எடுத்த மருத்துவமனை முதல் அமைச்சரின் தொகுதியில் இருப்பதுதான் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது.

  பிரியா பெயரில் கால்பந்து நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக அவருடைய பெயரில் மிகப் பெரிய கால்பந்து போட்டி சென்னையில் பாஜக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துவோம். இதற்கு மத்திய அமைச்சர்களை அழைத்து கால்பந்து வீராங்கனைகளுக்கான கௌரவத்தை கொடுப்போம்” என்றார்.

  இதையும் படிக்க: ’தாவல் திலகம்’ குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை.. முரசொலி விமர்சனம்..!

  மேலும், இந்த ஆண்டு பிரியாவின் குடும்பத்தினர் குறிப்பிட்டு சொல்லும் 10 வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கி அவர்களின் கால்பந்து பயிற்சிக்கான முழு செலவையும் பாஜக ஏற்கும் என்றும் ஒரு பிரியா இறந்துவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் அவரை போல் 10 பிரியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஆக்கப்பூர்வமான விஷயத்தை கையில் எடுத்துள்ளோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

  Published by:Murugesh M
  First published: