கலைஞரின் படத்தை சட்டசபையில் வைத்ததை பாஜக வரவேற்கிறது- அண்ணாமலை

அண்ணாமலை

தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிறகு தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.

  • Share this:
சட்டசபையில் மூத்த தலைவர்களின் படம் வைப்பது வழக்கமான விஷயம்தான் கலைஞர் படத்தை வைத்ததை பாஜக வரவேற்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சங்ககிரியில் தீரன் சின்னமலை தூக்கலிடப்பட்ட இடத்தில் அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிறகு  செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கும் குணாளன் நாடார்-க்கும், பொன்னானுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. சட்டசபையில் மூத்த தலைவர்களின் படம் வைப்பது வழக்கமான விஷயம்தான் கலைஞர் படத்தை வைத்ததை  அரசியல் காரணங்களையும் தாண்டி கலைஞர் தமிழ் பற்றாளர் என்பதால் பாஜக வரவேற்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில். தயாநிதிமாறன் அரசியல் நாகரீகம் அறிந்து பேசவேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு கண்டிப்பாக பிரதமர்  மோடி சம்மதிக்க மாட்டார். 1956 சட்டப்படி மேகதாதுவில் அணை கட்ட சட்டப்படி சாத்தியமில்லை
ஆகஸ்ட் 5-ஆம் தேதி திட்டமிட்டபடி தஞ்சாவூரில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடக அரசியல் தலைவர்களுக்கு வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூரில் பாஜக சார்பில் அனைத்து தலைவர்களும் பங்குபெறும் உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: