பாஜக - அதிமுக இடையே திடீர் காரசார கருத்து மோதல்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து, அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது

பாஜக - அதிமுக இடையே திடீர் காரசார கருத்து மோதல்
சிபி ராதாகிருஷ்ணன் | ஜெயக்குமார் | எல். முருகன்
  • News18
  • Last Updated: July 21, 2020, 10:13 PM IST
  • Share this:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு குறைவாவே உள்ள நிலையில், இப்போதே அரசியல் அனல் பரவத் தொடங்கியிருக்கிறது.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், இல்லையேல் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அதிமுக வின் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் பாரதிய ஜனதாவின் இந்த கருத்து குறித்து நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்து எடுபடாது என்றார். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் கண்ணாரக் காண்பார் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்

படிக்க: மரத்தை வெட்டி சிபிஐ அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்

படிக்க: புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் நடந்த பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது


தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி அரசு அமையும் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் முருகன் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக மீதான சி.பி.ராதாகிருஷ்ணனின் விமர்சனம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

 
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading