சென்னை வள்ளுவர் கோட்டத்தில்
பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்ட பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அஜித் படத்திற்கு இணையாக தனக்கு விளம்பரம் தேடி தந்த அனைவருக்கும் நன்றி என வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து கடந்த 25ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, பேச முற்படும்போது அருகில் இருந்த நபர் ஒருவர் அண்ணாமலை வந்துகொண்டு இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு, வி.பி.துரைசாமி, ‘வரட்டும் அதற்கு என்ன’ என்று கேட்டுள்ளார்.
மீண்டும் அவரது பேச்சு தடைபட்டது. இதையடுத்து, இருப்பா இடையில் வேற யாராவது வருவாங்க. அவங்க எல்லாம் வரட்டும் அப்பறம் பேசலாம். எனக்கு அசிங்கமா இருக்கு என்று கூறினார். அண்ணாமலை மேடைக்கு வந்ததும் ‘நான் பேசட்டுமா’ என்று அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு வி.பி.துரைசாமி பேசினார்.

விபி துரைசாமி
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின. திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் வி.பி.துரைசாமி என்பது குறிப்பிடதக்கது. மீண்டும் திமுகவிற்கே திரும்பும்படி பலரும் கருத்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் சர்ச்சை குறித்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வி.பி.துரைசாமி,
கடந்த நான்கு நாட்களாக நடிகர் அஜித் படத்திற்கு வழங்கும் விளம்பரத்திற்கு இணையாக தனக்கு விளம்பரம் வழங்கிய அனைவருக்கும் நன்றி என கூறினார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்த பின் குற்றங்கள் பெருகிவிட்டது... யாருக்கும் பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பாஜக ஆர்ப்பாட்ட மேடையில் என்ன நடந்தது ஏன் கோபாமாக பேசினீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் கையெடுத்து கும்பிட்டப்படி வாகனத்தில் சென்றுவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.