சீட்டும் கிடைக்கல.. பணமும் கிடைக்கல.. எம்.எல்.ஏ சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் பகீர் புகார்..

பாஜக பிரமுகர் புகார்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாகக் கூறி 50லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக பா.ஜ.க மத்திய அமைச்சரின் உதவியாளர் உட்பட 3 பேர் மீது பாஜக பிரமுகர் பகீர் புகார் தெரிவித்துள்ளார். மோசடி அரங்கேறியது எப்படி?

 • News18
 • Last Updated :
 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த 29 வயதான புவனேஷ் குமார், பாஜகவில் ஆரணி நகரத் தலைவராக இருந்து வருகிறார்.இவரது சித்தப்பா மகள் வசந்தி திருவண்ணாமலை பா.ஜ.க மகளிரணி மாவட்டத்துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி புவனேஷ் குமார் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.அதில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தனது சித்தப்பா மகளுக்கு எம்.எல்.ஏ. சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி 50 லட்சம் ரூபாய் பணத்தை ஏமற்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் உதவியாளர் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்திருந்தார்.

  சட்டப்பேரவைத் தேர்தலின் போது திருவண்ணாமலை பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான நரோத்தமன் மற்றும் புரோக்கரான விஜயராமன் ஆகியோரிடம் எம்.எல்.ஏ. சீட் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் புவனேஷ்குமார்.

  தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக உறுதியளித்த அவர்கள் அதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து கொடுத்ததாகவும், பட்டியலில் பெயர் வந்தவுடன் மீதமுள்ள 50 லட்ச ரூபாய் தருவதாகக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

  ஆனால் அவர்கள் வாக்களித்தபடி தேர்தலில் எம்.எல்.ஏக்கள் போட்டிடுவதற்கான பட்டியலில் வசந்தி பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புவனேஷ்குமார் இதுகுறித்து நரோத்தம்மன் மற்றும் விஜயராகவனிடம் கேட்ட போது மழுப்பலாக பதில் அளித்ததாகவும், கொடுத்த 50 லட்சத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

  Also read : புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி!

  இது குறித்து குடியரசுத் துணை வெங்கையா நாயுடு, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் முறையான பதில் கிடைக்காததால் சென்னை வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடமும் முறையிட்டுள்ளார்.ஆனால் எந்தவித பயனும் இல்லததால் போலீசாரிடம் புகாரளிக்க முடிவெடுத்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

  Also Read:ரூ.30.000 சம்பளம்! தேர்வே இல்லாமல் வங்கியில் வேலை..இன்றே முந்துங்கள்..நாளை தான் கடைசி தேதி-விண்ணப்பிக்க விவரம் இதோ..

  இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாகச் சொல்லப்படும் தனியார் ஹோட்டலுக்கு சென்று சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

  புவனேஷ் குமாரிடம் விசாரணை நடத்திய நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நரோத்தமன் மற்றும் விஜயராமன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

  இந்த புகார் தொடர்பாக புகார்தாரரான புவனேஷ் குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, நரோத்தமன் அவரது தந்தை சிட்டிபாபு மற்றும் விஜயராமன் ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: