ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக அரசை கலைத்தால் என்ன? பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ட்விட்!

தமிழக அரசை கலைத்தால் என்ன? பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ட்விட்!

வினோஜ் பி செல்வம்

வினோஜ் பி செல்வம்

RSS: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலகத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், மாநில அரசை கலைத்தால் என்ன என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ட்விட் செய்துள்ளார்.

  தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி  அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றத்தில்  ஆர்.எஸ்.எஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊர்வலகத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

  இந்நிலையில், பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தயிருந்த மனித சங்கிலி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் மத்திய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், திருமாவளவன் பேரணி நடத்த அனுமதி மறுப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  ஆர்.எஸ்.எஸ். ஊர்வலகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக மாநில செயலாளரான வினோஜ் பி செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை சரியில்லை என கூறி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. சட்டம் ஒழுங்கு மோசம் என்று காவல்துறை ஒப்புக் கொள்கிறதா? அப்படியானால் சட்டப்பிரிவு 356யை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கில்லாத மாநிலத்தின் அரசை கலைத்தால் என்ன?’ என பதிவிட்டுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: BJP, RSS, Tamil Nadu government