ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரு ஆளுநரை இப்படியா நடத்துவீங்க.? வானதி சீனிவாசன் காட்டம்!

ஒரு ஆளுநரை இப்படியா நடத்துவீங்க.? வானதி சீனிவாசன் காட்டம்!

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Vanthi on TN assmebly | சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், சட்டப்பேரவையில் நடந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

ஆளும் கட்சியும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கேவலமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரின் உரை தொடங்கியவுடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூச்சலிட்டதை வன்மையாக கண்டிப்பதாக கூறினார். மேலும், நிர்வாக திறன் இன்மை, லஞ்சம் மற்றும் வாரிசு அரசியல் குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை மறைப்பதற்கு இன்று ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வெளிநடப்பு செய்துள்ளதாக பேசினார்.

இந்த அரசாங்கத்தின் திட்டம் மற்றும் கொள்கையினை ஆளுநர் படிப்பது மரபு. ஆனால் ஆளுங்கட்சியின் சித்தாந்தத்தின் ஊதுகோளாக ஆளுநர் இருக்க வேண்டும் என இந்த அரசு நினைக்கிறது. இதற்கான அரசியல் களமாக சட்டமன்றத்தை மாற்றியுள்ளனர். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயனளிக்காது என கூறினார்.

தொடர்ந்து நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்டதை அரசு பொதுவெளியில் ஏன் சொல்ல மறுக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், சட்டப்பேரவையில் ஆளுநரை அழைத்து அசிங்கப்படுத்தி உள்ளனர். இதுதான் ஜனநாயக மரபா என தெரிவித்தார்.

First published:

Tags: RN Ravi, TN Assembly, Vanathi, Vanathi srinivasan