முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக பெயரை ’தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்’ என மாற்றத் தயாரா? - வானதி சீனிவாசன் சவால்..!

திமுக பெயரை ’தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்’ என மாற்றத் தயாரா? - வானதி சீனிவாசன் சவால்..!

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தி.மு.க முன்கூட்டியே திட்டமிட்டு ஆளுநரை அவமானப்படுத்தியுள்ளனர் என்று வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தி.மு.க முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டணிக் கட்சிகளை ஏவி விட்டு, ஆளுநரை அவமதித்துள்ளதாகவும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும்

’திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரை ’தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்’ என்ற மாற்றத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் மரபுப்படி ஆளுநர் உரையாற்றியுள்ளார். ஆளுநர் உரைக்கு பொதுவாக எதிரக்கட்சிகள்தான் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால், ஆளுநருக்கு ஆளும் கட்சியான தி.மு.கவே எதிர்ப்பு தெரிவித்து கேவலமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டணிக் கட்சிகளை ஏவி விட்டு, ஆளுநரை அவமதித்துள்ளனர். இது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனம் அவருக்கு அளித்த கடமைகளின்படியே செயல்பட்டு வருகிறார். ஆளுநர் பதவி என்பது நியமன பதவியாக இருக்கலாம். ஆனால், அவர், இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர் பதவியை பாஜக அரசு புதிதாக உருவாக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய பதவி. எனவே, ஆளுநரை அவமதிப்பது சட்டமேதை, மக்கள் தலைவர் அம்பேத்கரை அவமதிப்பதற்குச் சமம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத பதவி என்று தி.மு.கவினர் விமர்சிக்கின்றனர். முந்தைய காலங்களில் ஆட்சியில் இருந்தப்போது ஆளுநர் பதவியை நீக்கியிருக்கலாமே? செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,  சென்னா ரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா போன்ற கவர்னர்களை பயன்படுத்தி, மாநில அரசுக்கு தி.மு.க. கடும் நெருக்கடி கொடுத்தது. அப்போதெல்லாம், மாநில சுயாட்சி மாநில உரிமையெல்லாம் என்ன ஆனது? என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தி.மு.க.வின் சித்தாந்தத்தை பேசுமாறு ஆளுநரை நிர்பந்திப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்றும் ஆளுநரை தி.மு.க அசிங்கப்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சை குறித்து பேசுகையில்,

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி . 'தமிழ்நாடு' என்று சொல்ல வேண்டாம் என்றோ, 'தமிழ்நாடு என்பதற்கு எதிராகவோ எதுவும் பேசவில்லை. தமிழகம்' என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றுதான் சொன்னார்.

''தமிழகம்' என்பது பொருத்தமாக இருக்கிறது என்பதால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரும், தமிழகம் என்பதைப் பயன்படுத்தி வந்தனர். தலைநிமிர்ந்த தமிழகம், மனம் குளிருது தினந்தினம்' என்று, தி.மு.க. அரசு விளம்பரம் செய்து வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் இந்த வாசகத்தை தி.மு.கவினர் வைத்திருந்தனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் இந்த வாசகத்தை, தனது சமூக ஊடக பக்கங்களில் முகப்பு படமாக வைத்திருந்தார்.

Also Read : ஒரு ஆளுநரை இப்படியா நடத்துவீங்க.? வானதி சீனிவாசன் காட்டம்!

''தமிழ்நாடு' என்றுதான் சொல்ல வேண்டும். 'தமிழக'ம் என்றுதான் சொல்ல வேண்டும் என. தி.மு.க கூறுகிறது. அப்படியெனில், 'திராவிட மாடல்' என்பதற்குப் பதிலாக 'தமிழ்நாடு மாடல்' என்று சொல்லலாமே. தங்கள் கட்சியின் பெயரை ஏன், 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று வைத்துள்ளனர். 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என. வைத்திருக்கலாமே. ஆந்திராவில், 'தெலுங்கு தேசம்' என்றுதானே கட்சி உள்ளது. "திராவிட தேச' என்று அவர்கள் பெயர் வைக்கவில்லையே. தி.மு.கவுக்கு ஏன் இந்த இரட்டை வேடம்?

''தமிழ்நாடு' என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க வினருக்கும் விருப்பமானது என்றால், 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என்று பெயரை மாற்ற தயாரா? 'திராவிட மாடல்' என்பதை 'தமிழ்நாடு மாடல்' என்று சொல்ல தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, DMK, Tamil Nadu Governor, Vanathi srinivasan