பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை தமிழக அரசு அலுவலகங்களில் வைக்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலரிடம் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என தமிழக அரசு 1978ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது (அரசாணை எண்: 47 - 07.01.1978). இந்த அரசாணையை அரசு அலுவலகங்களில் செயல்படுத்த வேண்டும் என்று அக்.13ம் தேதி பாஜக மாநில பட்டியலணி தலைவர் வி.பாலகிருஷ்ணன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Also read: ’இட ஒதுக்கீடு விவகாரத்திலிருந்து திசை திருப்பவே திருமாவளவன் பேச்சு சர்ச்சையாக்கப்படுகிறது’ - இயக்குநர் கவுதமன் கருத்து..
அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் அலுவலகத்தில் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்கக் கோரி மாவட்ட சிறப்பு அலுவலர் இரா.லலிதாவிடம் பாஜக மாவட்ட பட்டியலணி தலைவர் ஈழவேந்தன் தலைமையில் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் மாவட்ட சிறப்பு அலுவலரிடம் வழங்கி வலியுறுத்தினர். இதில், பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.