நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தும் எண்ணம் இல்லை - பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

எஸ்.ஆர்.சேகர்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2026-ம் ஆண்டு வரை உயர்த்தப்படாது என்று பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். 

  • Share this:
தொகுதி மறுசீரமைப்பின் அடிப்படையில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து  தெரிவித்திருந்தார். அதில் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு நடைபெற்றால் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் பாதிப்படையும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கோவையில் பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டியளித்தார். அப்போது அவர், ‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 1,000 மாக மாற்றபோவதாக சொல்லப்படுவது புரளி என தெரிவித்தார். நாடாளுமன்ற புதிய கட்டிடம்  அடுத்த 100 ஆண்டுகளுக்கு இருக்கும் வகையில் 2,000 எம்.பிகளுக்கான இட வசதிகளுடன் கட்டப்படுகின்றதே தவிர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மணீஷ் திவாரி விஷயம் தெரியாமல் நாடாளுமன்றக் கட்டிடம் குறித்து பேசுகின்றார் எனவும் தெரிவித்தார்.

மேலும் 2003 ல் பா.ஜ.க - திமுக கூட்டணி இருந்த போது கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்ததில் 2026 வரை நாடாளுமன்றத்தில் இப்போதைய எண்ணிக்கையே தொடரும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தெரிவித்துள்ளதை சுட்டிகாட்டிய அவர், தென் மாநிலம் பாதிக்க கூடாது என்பதற்காக 2026 வரை நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்தப்படாது என அப்போதைய பிரதமர் வாஜ்பாஜ் சொல்லி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஸ்திவாரியின் கருத்தும் , அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரம், தி.மு.க சண்முகம், அ.தி.மு.க வைகை செல்வன் போன்றோரும் உண்மைககு புறம்பாக அல்லது விசயம் தெரியாமல் இதை பற்றி பேசுவதாகவும், தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால்  2026 வரை உறுப்பினர்களின் எண்ணிக்கை  உயர்த்தப்படாது எனவும் இதில் பயத்திற்கு அவசியமே இல்லை எனவும் தெரிவித்தார்.

வரும் காலகட்டத்தில் தென்மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே பா.ஜ.க செயல்படும் எனவும், இப்போதைக்கு இதைபற்றியும் கவலைப்பட தேவையில்லை. இப்போது சீர்திருத்தம் நம் கண்முன் இல்லை எனவும் தெரிவித்தார். 2026-க்குப் பின்பு வரும் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர்த்தப்படலாம் எனவும் 2031 மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்தல்படலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் உறுப்பினர்கள் அமரும் எண்ணிக்கையை அடுத்த 100 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டு 2,000 மாக உயர்த்தி இருப்பதை அரசியல் ஆக்குவது மிகவும் துரதிஷ்டமானது என்றும் தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: