Home /News /tamil-nadu /

பாஜக இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்: நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேச்சு

பாஜக இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும்: நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேச்சு

டி.ஆர்.பாலு.

டி.ஆர்.பாலு.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டு மீனவர் கண்ணீரை மத்திய அரசு எப்போது துடைக்கப்போகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பணியாற்றினால், பாரதிய ஜனதா என்ற ஒரு கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்று நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. பேசி உள்ளார்.

    குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து அவர் பேசும் போது,

    “குறித்த காலத்தில் நாட்டு மக்களின் உயிர் காக்கும் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர துணை நின்ற நமது பிரதமரையும், பெருமைக்குரிய விஞ்ஞானிகளையும், வல்லுநர்களையும் தி.மு.க. சார்பாக நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்படாத 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டு மீனவர் கண்ணீரை மத்திய அரசு எப்போது துடைக்கப்போகிறது.

    இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது மத்திய அரசு வெளியுறவுத்துறை அதிகாரிகளை அனுப்பி, சர்வதேச நீதி விசாரணை குழுவின் முன் தவறிழைத்த குற்றவாளிகளை நிறுத்தப்பட்டு அவர்களை தண்டிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அவையில், ஆட்சி பீடத்தில் உள்ள பா.ஜ.க., இந்திய வாக்காளர்களின் 37.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் 62.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.

    ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமை இல்லாததால், எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதினால் மட்டுமே பா.ஜ.க. பலம் பொருந்தியதாக காணப்படுகிறது. வருங்காலத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பணியாற்றினால் பா.ஜ.க. என்ற ஒரு கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். எனவே, அனைத்திந்திய அளவிலான பெரும் கட்சிகள், சிறு கட்சிகளை அரவணைத்து சென்றால் மட்டுமே, பா.ஜ.க.வுக்கு உண்மைகளை புரிய வைக்க முடியும்."

    இவ்வாறு அவர் பேசினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: BJP, DMK

    அடுத்த செய்தி