“முதலில் தண்ணீர் வரும்... பின்னர் தாமரை மலரும்” தமிழிசை சவுந்தரராஜன்

தூத்துக்குடியில் போட்டியிட்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார்.

“முதலில் தண்ணீர் வரும்... பின்னர் தாமரை மலரும்” தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை
  • News18
  • Last Updated: May 25, 2019, 10:17 AM IST
  • Share this:
நிதின் கட்கரி முதல் பணியாக தமிழகத்துக்கு தண்ணீர் தர காவிரி - கோதாவரி இணைப்பு என அறிவித்துள்ளார் எனவே இங்கே தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. தேசிய அளவில் 300-க்கும் அதிகமான இடங்களில் தனித்து வெற்றி பெற்ற பாஜக, தமிழகத்தில் தோல்வி அடைந்துள்ளது.

தூத்துக்குடியில் போட்டியிட்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார்.


இந்நிலையில், நிதின் கட்கரி முதல் பணியாக தமிழகத்துக்கு தண்ணீர் தர காவிரி - கோதாவரி இணைப்பு என அறிவித்துள்ளார் எனவே இங்கே தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

“தாமரை மலர தண்ணீர் வேண்டுமே!கே எஸ்அழகிரி? தமிழகத்தை தண்ணீரில்லாமல் போனதற்கு இந்த நாட்டை 60 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ்தான் காரணம்.எனவேதான் எங்கள் அமைச்சர் நிதின்கட்கரி இந்தமுறை முதல்பணியாக தமிழகத்திற்கு தண்ணீர்தர காவிரி கோதாவரி இணைப்பு என அறிவித்துள்ளார் எனவே இங்கேதாமரை மலரந்தே தீரும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.First published: May 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading