எதுகை - மோனையாக ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கிய தமிழிசை!

ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் தமிழிசையின் ட்வீட்டை குறிப்பிட்டு விமர்சிக்கத் தொடங்கினர்.

எதுகை - மோனையாக ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கிய தமிழிசை!
தமிழிசை சௌந்தர்ராஜன்
  • News18
  • Last Updated: April 17, 2019, 2:35 PM IST
  • Share this:
தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது எழுந்த பிரச்னையை கொண்டு, “குற்ற பரம்பரை அல்ல... கற்ற பரம்பரை” என்று தமிழிசை எதுகை மோனையாக ட்வீட் செய்ய அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி நடக்க உள்ள நிலையில், நேற்றுடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது.

தூத்துக்குடி தொகுதி தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்த வேட்புமனு பரிசீலனையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர்கள் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.


கனிமொழி பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது.

நீண்ட இழுபறிக்குப் பின்5 மணி நேரம் கழித்து இருவரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

நீக்கப்பட்ட தமிழிசையின் ட்வீட
இதற்கிடையே, குற்ற வழக்குகள் குறிப்பிடாமல் இருந்த செய்தியை மேற்கொள் காட்டி, “குற்ற வழக்கு இல்லை. நான் கற்ற பரம்பரை. குற்ற பரம்பரை அல்ல.கணவரும் அவ்வாறே.வீண் வதந்தி? தோல்வி பயம்???” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

இந்த ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் தமிழிசையின் ட்வீட்டை குறிப்பிட்டு விமர்சிக்கத் தொடங்கினர்.

குற்றப்பரம்பரை என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் குற்றப்பரம்பரை என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பின் அந்த சட்டம் 1947-ல் நீக்கப்பட்டது.

Also See...

First published: March 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading