• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொலைநோக்கு பார்வையில் திமுக, காங்கிரஸ் திட்டமிட்டிருந்தால் குடிநீர் பிரச்னை வந்திருக்காது - தமிழிசை

தொலைநோக்கு பார்வையில் திமுக, காங்கிரஸ் திட்டமிட்டிருந்தால் குடிநீர் பிரச்னை வந்திருக்காது - தமிழிசை

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

"கிடப்பில் போடப்பட்ட நீர்நிலை திட்டங்களை செயல்படுத்தினாலே போதும். குடிநீர் பஞ்சம் வராது. ஆனால் இங்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது"

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியை எங்கும் திணிக்க வேண்டும் என்பது நமது எண்ணம் கிடையாது தேவை ஏற்பட்டால் அவர்களாகவே மணம் வந்து கற்றுக்கொள்ளலாம், இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது தவறு கிடையாது என்று தூத்துக்குடி யில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநல்லூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா ஆரம்ப பள்ளியில் இலவச சிறுநீரக மற்றும் பொதுநல சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் தமிழிசை, அவரது கனவா் சவுந்தரராஜன், மகன் சுகநாதன் மற்றும் குழுவினர் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனா்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ”தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் நான் போராட்டம் செய்கிறேன் என்கிறார். போராட்டம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

    நான் தேர்தலில் தோற்றாலும் இங்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் அளிதைதுள்ளேன்.

    கிடப்பில் போடப்பட்ட நீர்நிலை திட்டங்களை செயல்படுத்தினாலே போதும். குடிநீர் பஞ்சம் வராது. ஆனால் இங்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது உடனே தீா்க்கப்பட வேண்டும்.

    இதனை தொலைநோக்கு பாா்வையில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த திமுக, காங்கிரஸ் செய்திருந்தால் இந்த குடிநீர் பிரச்சனையே வந்திருக்காது” என்றார்.

    ரயில்வேயில் இந்தி, ஆங்கிலம் மட்டும் தான் பேச வேண்டும் என்று வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற்றது குறித்து கருத்து தெரிவித்த அவர், பயணிகளின் பாதுகாப்பை கருதி தான் அந்த அறிக்கை கொடுக்கப்பட்டது. இந்தியை எங்கும் திணிக்க வேண்டும் என்பது நமது எண்ணம் கிடையாது. தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு மணம் வந்து கற்றுக்கொள்ளலாம். இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது தவறு கிடையாது என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: