நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி. இடங்களை ரஃபேல் கடிகாரம் வென்று கொடுக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர்.
கோவையில் குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு பெரிய எழுச்சி கிடைத்துள்ளது. 2024 இல் 25 எம். பி.க்கள் கிடைப்பர்கள் என்பது இலக்கு.தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஊழல் செய்து வருகிறார்கள். டீக்கடையில் எப்போது ரபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ அன்றைக்கு வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன் என்றார்.
கடவுளுக்கு மிக நெருக்கத்தில் இருப்பவர்கள் உடலில் சிறு குறைகளுடன் மனதில் எந்த குறையும் இல்லாதவர்களே. 2024 இல் 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்பது இலக்கு. தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஊழல் செய்து வருகிறார்கள். டீக்கடையில் எப்போது ரபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ அன்றைக்கு வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன். ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் நம் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
2ஜி விவகாரம் எப்படி திமுகவை 10 ஆண்டுகள் ஆட்சியில் அமரவிடாமல் செய்ததோ அதேபோல் மீண்டும் நிகழும். 70 ஆண்டுகளாக நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம். பொதுமக்கள் திமுக ஊழல் பற்றி தெரிவிக்க ஒரு வெப்சைட் அப்ளிகேஷன் தயாராகிறது. தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரின் பினாமிகள் குறித்து அதில் தெரிந்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் பொதுமக்கள் ஒரு புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம் என கூறினார்.
கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் திமுக நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்காது. 25 எம்பிகளை வாங்க ரபேல் வாட்சும் உழைக்கும். முதலமைச்சரின் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை. நமக்கு தைரியம் உள்ளது. டீக்கடையில் பேசும் பொழுது தான் அரசியல் ஆரம்பிக்கிறது. திமுகவினரிடம் உள்ள இரண்டு லட்சம் கோடியா.? வாட்சின் பில்லா.? டீக்கடையில் பேசுவார்கள் என அண்ணாமலை பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, DMK, Local News, Tamil News