ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரதமர் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு மீது அவதூறு கருத்து : பாஜக ஐ.டி விங் தலைவருக்கு சம்மன்!

பிரதமர் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு மீது அவதூறு கருத்து : பாஜக ஐ.டி விங் தலைவருக்கு சம்மன்!

மாதிரி படம்

மாதிரி படம்

நாளை காலை 11 மணிக்கு சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக அரசு பாதுகாப்பு குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட பாஜக ஐ.டி விங் தலைவர் நிர்மல் குமார் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்ற பிரிவு - சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதி அளிக்காததால் அவரது வருகை இந்த ஆண்டு தள்ளிப்போனதாக பாஜக ஐ.டி விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக மொகிந்தர் அமர்நாத் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இப்புகார் தொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் தேதி பாஜக ஐ.டி விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் கலகம் செய்ய தூண்டுதல், அரசுக்கு எதிராக கலகம் செய்ய தனி நபரை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read:  குஷ்பு பற்றி அவதூறு பேச்சு..திமுக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.டி.ஆர் நிர்மல் குமாரிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்கவுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். குறிப்பாக நாளை காலை 11 மணிக்கு சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Arunkumar A
First published:

Tags: BJP, PM Modi