ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணைகிறாரா? - அண்ணாமலை விளக்கம்

ராஜேந்திர பாலாஜி, அண்ணாமலை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணைகிறாரா என்பது குறித்த கேள்வி பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் வந்துள்ளனர். நாளை பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளனர்.

  இந்நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,"பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக டெல்லி வந்துள்ள இந்த பயணத்தின் பொழுது 11 மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பேச உள்ளேன். பெரும்பாலான அமைச்சர்களை ஏற்கனவே சந்தித்து விட்டேன். சென்னை, கோவை, தூத்துக்குடி விமானநிலையம் சம்பந்தமாக மத்திய அமைச்சர் ஜோதிர்ராதித்ய சிந்தியாவை சந்திக்க உள்ளேன். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளேன். தமிழக எம்.பி.க்கள் தமிழகத்தின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறார்கள். தமிழக மக்களின் பிரச்சனைகளை எழுப்பாமல் வேளாண் மசோதா குறித்து பிரச்சனையை எழுப்பி வருகிரார்கள்.

  "ஆசிவாத் யாத்திரை" வரும் 10 ஆம் தேதி தமிழகத்தில் பாஜக அமைப்புச் செயலர் சந்தோஷ் தொடங்கி வைக்க உள்ளார். அதை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 16,17,18 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். ஊட்டி, கோவை மற்றும் நாமக்கல் ஆகிய தொகுதிகளுக்கு செல்ல உள்ளார்.

  மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரை நேற்று சந்தித்து விரிவாகப் பேசியிருக்கிறேன். மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அணை கட்ட முடியாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே காவிரி விவகாரம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அதனால் மற்ற கட்சிகள் வேறு வேலையை பார்க்கலாம்" எனத் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் பா.ஜ.கவில் இணைவது தொடர்பாக கேட்டபோது, "யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. அதே நேரத்தில் அரசியலில் எந்த ஒரு கட்சியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சில கட்சிகளில் உரிய தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. சில கட்சிகளில் சுதந்திரமாக சிலரால் செயல்பட முடியாது. அதனால் தான் பா.ஜ.க.வை பெரும்பாலானவர்கள் தேடி வருகிறார்கள். எங்களுடைய சித்தாந்தத்தை நம்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்" என தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: