இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க ஆதரவு! பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க ஆதரவு! பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க ஆதரவு
  • News18
  • Last Updated: October 4, 2019, 3:59 PM IST
  • Share this:
விக்ரவாண்டி, நாங்குநேரி நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளிப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாங்கு நேரி மற்றும் விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தி.மு.க கூட்டணியில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும், விக்ரவாண்டி தொகுதியில் தி.மு.கவும் வேட்பாளர்களை களமிறக்குகிறது. நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் இடைத் தேர்தலும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் இரண்டு தொகுதியிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.கவின் கூட்டணியில் இணைந்துபோட்டியிட்ட பா.ஜ.க ஆதரவு அளிக்காமல் இருந்துவந்தது. மேலும், அ.தி.மு.க அரசின் செயல்பாடுகள் குறித்து சில தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க விமர்சனமும் செய்திருந்தது.


இந்தநிலையில், சென்னை தி.நகரிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்குச் சென்று பொன்.ராதாகிருஷ்ணனிடம் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளிக்குமாறு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கைவிடுத்தார். அதனையடுத்து, நியூஸ்18 தொலைக்காட்சியிடம் பேசிய ஜெயக்குமார், ‘அ.தி.மு.க தலைவர்களின் விருப்பம் பா.ஜ.கவுடனான கூட்டணி தொடரவேண்டும். அதன் அடிப்படையில், ஆதரவு கேட்டு வந்துள்ளோம். பா.ஜ.க தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வருவார்கள்’ என்று தெரிவித்தார்.

நியூஸ்18 தொலைக்காட்சியிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் இணைந்து பா.ஜ.க போட்டியிட்டது. அன்று தொடங்கி கூட்டணி தொடர்கிறது. நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் ஆதரவு கேட்டு தேசியத் தலைவர்களிடம் பேசியுள்ளனர். அதனைத்தொடர்ந்து, தமிழகத் தலைவர்களிடம் ஆதரவு கேட்டு ஜெயக்குமார் வந்துள்ளார். இரண்டு தொகுதிகளிலும் அ.தி.முகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்வோம்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்