Home /News /tamil-nadu /

Thaipusam | தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூச விழா.. பழனியில் காவடி எடுத்த பாஜக மாநில தலைவர் எல். முருகன்..

Thaipusam | தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூச விழா.. பழனியில் காவடி எடுத்த பாஜக மாநில தலைவர் எல். முருகன்..

Youtube Video

தைப்பூச திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆண்டு தோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் நடைபெறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், தித்தணி உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மூன்றாம் படை வீடான பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 22ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான இன்று, மாலையில் தேரடியில் தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். மேலும், திருத்தோரோட்டத்தை ஒட்டி பாதுகாப்பு பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பழனி கோயில் பாஜக மாநிலத் தலைவர் முருகன், நேற்று காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அவருடன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பாஜக மாநிலத் துணை தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் காவடி எடுத்து வநது சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம்

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதை தொடர்ந்து 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும், 8:30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

    மேலும் படிக்க... Thaipusam | தைப்பூசம் ஜோதி தரிசன விழா: வடலூர் சத்திய ஞானசபையில் திரண்ட பக்தர்கள்

    தைப்பூசத்தை ஒட்டி வடலூரில் ஜோதி தரிசனம்

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தை ஒட்டி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த ஆண்டு வடலூரில் 150-வது ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, சத்ய ஞானசபையில் இன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடியுள்ளனர். இன்று 4 முறையும், வெள்ளிக்கிழமை 2 முறை என மொத்தம் ஆறு காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

    வீடியோ

     



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: L Murugan, Palani, Thaipusam

    அடுத்த செய்தி