ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீங்க எந்த சேனல்.. செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை

நீங்க எந்த சேனல்.. செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி, “நீங்க எந்த சேனல்...நீங்க எந்த சேனல்” என அண்ணாமலை கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் திமுக நிர்வாகி தவறாக நடந்துகொண்ட பின்னர் 2 நாள்வரை வழக்கு பதிவு செய்யாமல் இருக்கும் அளவுக்கு சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கமிஷனர் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  “கட்சியிலிருந்து வெளியே செல்வோரை வாழ்த்தி வழி அனுப்புகிறோம். என்னைப் பற்றிய எந்த விமர்சனமாக இருந்தாலும் என்னுடைய பதில் மவுனம்தான். பாஜக ஒரு ஜனநாயக கட்சி. என்னை 10 பேர் விமர்சித்தால் அது நல்லதுதான்” என  அண்ணாமலை பதிலளித்தார்.

மேலும், தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி, “நீங்க எந்த சேனல்...நீங்க எந்த சேனல்” என கேள்வி எழுப்பினார். மேலும், கட்சி சேனல் நடத்துபவர்கள் எல்லாம் என்னிடம் பேச வேண்டாம். சும்மா நீங்கள் டிவியில் போட்டால் பயந்துவிடுவோமா?  இந்த வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் என்று காட்டமாகக் கூறினார்.இதனால் செய்தியாளர்களுக்கும் அண்ணாமலைக்கு இடையே வாக்குவாதம் உண்டானது.

First published:

Tags: Annamalai, BJP