பெரியாரின் புத்தகத்தை கனிமொழிக்கு கொடுக்கச் சொல்லுங்கள் - தமிழிசை செளந்தரராஜன்

பிரதமர் மோடி பணமதிப்பிழப்புக்கு பின்பு பேசுகையில் என்னை ஒரு தலைவர் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டி இருப்பார் அந்த தலைவர் காமராஜர் என்று கூறினார்.

Web Desk | news18
Updated: April 13, 2019, 1:04 PM IST
பெரியாரின் புத்தகத்தை கனிமொழிக்கு கொடுக்கச் சொல்லுங்கள் - தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்
Web Desk | news18
Updated: April 13, 2019, 1:04 PM IST
பிரதமர் மோடிக்கு பெரியாரின் புத்தகங்களை தர வேண்டுமென்று ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், பிரதமருக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, "பிரதமர் மோடியை நேரில் சந்தித்தால் பெரியார் மற்றும் கருணாநிதி புத்தகங்களை தர வேண்டும். அதை படித்தாவது தமிழகத்தின் வரலாறை தெரிந்து கொள்ளட்டும்" என்று கூறியிருந்தார்.

இதற்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய தமிழிசை நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பெரியாரால் குறிப்பிட்டப்பட்ட காமராஜரை புறந்தள்ளியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்று விமர்சித்தார்.

கனிமொழி - திமுக


ராகுல் அரசியலுக்காக எதையாவது சொல்வார் என்றும் தமிழிசை கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி மோடிக்கு பாடம் எடுக்க வேண்டாம். பெரியார் புத்தகத்தை கனிமொழிக்கு கொடுக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்.

மோடி எல்லாரையும் மதிக்க கூடியவர்,முதலில் காமராஜரை காங்கிரஸ் கட்சியினர் என்ன செய்தானர் என்பதை கேட்கச் சொல்லுங்கள். அவரை உதாசீனப்படுத்தியது இந்திரா காங்கிரஸ் கட்சிதான். காமராஜர் உயிரோடு இருக்கும் போதே அவரை புறந்தள்ளியவர்கள்.

ஆனால் பிரதமர் மோடி பணமதிப்பிழப்புக்கு பின்பு பேசுகையில் என்னை ஒரு தலைவர் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டி இருப்பார் அந்த தலைவர் காமராஜர் என்று கூறினார்.

Also see... கருணாநிதி மறைவை நினைவு கூர்ந்து பிரசாரத்தில் கண்கலங்கிய உதயநிதி!   

மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது ராகுல் காந்தியின் பேச்சு: கே.எஸ். அழகிரி!   

சுதந்திரத்திற்கு பின் உலகம் போற்றிய பிரதமர் மோடி மட்டுமே - எடப்பாடி பழனிசாமி 

Also see... தேர்தல் களத்தில் வலுவாக எதிரொலிக்கும் நீட்...!


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...