• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மும்மொழிக்கொள்கை வந்தால் தமிழை பிறமாநிலத்தவர்கள் கற்பார்கள் - தமிழிசை

மும்மொழிக்கொள்கை வந்தால் தமிழை பிறமாநிலத்தவர்கள் கற்பார்கள் - தமிழிசை

தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழிசை சௌந்தர்ராஜன்

”தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்ட மாட்டாது. இப்போது செய்யப்பட்டுள்ளது வெறும் பரிந்துரை தான்”

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியை வைத்து இனி ஸ்டாலின் அரசியல் செய்ய முடியாது என்றும் தமிழகத்தில் பாஜக இந்தியை திணிக்காது என்றும் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். 

    சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடியில் எனக்கு 2 1/2 லட்சம் மக்கள் வாக்கு அளித்திருக்கிறார்கள். தொடர்ந்து பிரச்சாரத்தின் போது என்ன செய்வேன் என்று கூறினேனோ அதை செய்து வருவேன்.

    மக்களை திசை திருப்ப திமுக நாடகம் ஆடி வருகிறது. இந்தியை வைத்து திமுக - காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்ட மாட்டாது. இப்போது செய்யப்பட்டுள்ளது வெறும் பரிந்துரை தான்.

    பாஜகவின் கோர முகம் தெரிகிறது என்று ப.சிதம்பரம் கூறுவது தவறு. இவற்றை அடித்தளமிட்டதே அவர் தான்.

    மும்மொழிக்கொள்கை வந்தால் தமிழ் போன்ற அருமையான மொழியை பிற மாநிலத்தவர்கள் கற்பார்கள்.

    மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து, அதிமுக தலைமையும், பாஜக தலைமையும் தான் முடிவு செய்யும்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: