ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’போலீஸ் உயர்அதிகாரிகள் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள்’- காவல்துறை குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்!

’போலீஸ் உயர்அதிகாரிகள் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள்’- காவல்துறை குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்!

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக காவல்துறையின் ஒவ்வொரு பாயிண்ட்டுக்கு பதில் கொடுக்கப்படும் என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு காவல்துறை மீது  குற்றச்சாட்டியுள்ளார்.

    கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பல கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றும் வழக்கை தாமதமாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது தவறு என விளக்கம் அளித்துள்ளோம். எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, மத்திய அரசுக்கு முறையாக அறிக்கை அனுப்பி, அதன்பிறகு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டதாக அண்ணாமலை மீது தமிழக காவல்துறை குற்றச்சாட்டை முன் வைத்தது.

    மேலும் உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் குற்றச்சாட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது.

    ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: அவதூறு பரப்பும் பாஜக மாநில தலைவர் - அண்ணாமலை மீது புகார்களை அடுக்கிய காவல்துறை!

    இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

    காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர்.' என அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Annamalai, Tamilnadu police