ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'மைனாரிட்டி சமூகம் என்பதால் திமுக தயங்குகிறது'.. விடுதலைக்குப்பின் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

'மைனாரிட்டி சமூகம் என்பதால் திமுக தயங்குகிறது'.. விடுதலைக்குப்பின் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

கைதுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட அண்ணாமலை

கைதுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட அண்ணாமலை

பாஜகவினர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படும் நிலை உள்ளது ஆனால் திமுகவினர் தவறு செய்தாலும் நடவடிக்கை இல்லை என அண்ணாமலை குற்றச்சாட்டு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பாஜக பெண் நிர்வாகிகளை தவறாக பேசிய திமுக நிர்வாகி மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக அரசு கைது செய்யாமல் உள்ளதா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்

  தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் சைதை சாதிக். இவர், கடந்த 26 ஆம் தேதி ஆர்.கே நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின்போது பா.ஜ.க பெண் நிர்வாகிகளும் நடிகைகளுமான குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசினார். அவர் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

  இந்த  நிலையில்  திமுக நிர்வாகி  சைதை சாதிக் என்பவர் பாஜக மகளிர் அணியைச் சார்ந்த நிர்வாகிகளை தவறாக பேசியதை கண்டித்து பாஜகவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  இதையும் படிங்க:  கொட்டும் மழையில் கிராம மக்களுடன் அமைச்சர் பொன்முடி வாக்குவாதம்.. சொந்த தொகுதியில் பரபரப்பு!

  காவல்துறையின் முன் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் விடுவித்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,மகளிரை தரகுறைவாக விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட காவல் துறை அனுமதி மறுத்ததுள்ளது சர்வாதிகார செயல் என்று விமர்சித்தார்

  பெண்களுக்காக ஆட்சி நடப்பதாக தமிழக முதல்வர் கூறுவது உண்மையாக இருந்தால் ஏன் திமுக நிர்வாகி கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய அவர் அரசின் இயலாமையை தமிழக மக்கள் கண்டு கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

  பாஜகவினர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படும் நிலை உள்ளது ஆனால் திமுகவினர் தவறு செய்தாலும் நடவடிக்கை இல்லை என்று குற்றம்சாட்டினார். திமுக நிர்வாகி மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் அவர் குறை கூறினார்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Annamalai, BJP, DMK