ஊடகங்கள் தங்களது கடமையைச் செய்ய பாஜக தொண்டர்கள் உறுதுணையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக பாஜக தலைமையகத்தில் பெண் ஒருவர் மயக்கமடைந்ததை ஊடகத்தினர் ஒளிப்பதிவு செய்ய முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பையும் அனைத்து தரப்பிலும் விசாரித்து அறிந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக தனது வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராமல் ஏற்படும் இதுபோன்ற நிகழ்வின்போதுதான், கண்ணியம் காத்து, கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டு, பாஜக-வின் பெருமையை அனைவரும் நிலைநாட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் மற்றும் தொண்டுப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்படும் தொண்டர்கள் அனைவரும் ஊடக மேலாண்மையையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Also read: மாணவி சத்யாவை கொலை செய்த சதிஷையும் ரயிலில் தள்ளி தண்டிக்க வேண்டும்: விஜய் ஆண்டனி கோரிக்கை
ஊடகங்களுக்கு உரிய துணை செய்தால், அவர்கள் தங்களது வளர்ச்சிக்கும், முயற்சிக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கடமை செய்யும் ஊடகத்தையும் கவனிக்கும் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என பாஜக தொண்டர்களுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, Bjp state president, Journalist