Home /News /tamil-nadu /

தமிழக அரசு கட்டு, கரப்ஷன், கமிஷன் என வேலை செய்கிறது - அண்ணாமலை

தமிழக அரசு கட்டு, கரப்ஷன், கமிஷன் என வேலை செய்கிறது - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக அரசு கட்டு, கரப்ஷன், கமிஷன் என வேலை செய்து கொண்டிருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக அரசு எந்த வேலை செய்தாலும் 20 சதவிகிதம் கமிஷன். வேலை செய்து முடித்த உடன் பில் பாஸ் செய்வதற்கு 4% கேட்கின்றனர். இது ஒரு குடும்பம் கமிஷனை பெற்றுக்கொள்கிறது. இதனால் கட்சித் தலைவர்கள் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் கலந்து கொள்வது கிடையாது. இந்த நிலை நீடித்தால் தமிழக மக்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்னும் மூன்று மாதத்தில் கரப்ஷன் குறித்து தமிழகத்தின் சாமானிய மனிதனும் பேச ஆரம்பிப்பான்.

    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை இல்லந்தோறும் கல்வி என்று பெயர் மாற்றம் செய்து செயல்படுத்துகின்றனர். மத்திய அரசினுடைய திட்டங்களை மாநில அரசின் திட்டங்கள் போன்று செய்கின்றனர். திமுக அமைச்சர்கள் புதிய கல்விக் கொள்கை குறித்து இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Also Read : ஜனவரி 5ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்
     தமிழகத்தின் காவல்துறை திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர் கையில் உள்ளது. இதனால்தான் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. காவல்துறை அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். தமிழக டிஜிபிக்கு முழு சுதந்திரத்தை கொடுக்கவில்லை என்றார்.


    மேலும் மத்திய அரசு பாரபட்சமின்றி அனைத்து திட்டங்களையும் தமிழகத்திற்கு கொடுத்து வருகிறது இதனால் தமிழக மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Annamalai, BJP

    அடுத்த செய்தி