Home /News /tamil-nadu /

பாஜக மீது டி.டி.வி.தினகரன் விமர்சனம்: பதிலடி கொடுத்த கருப்பு முருகானந்தம்

பாஜக மீது டி.டி.வி.தினகரன் விமர்சனம்: பதிலடி கொடுத்த கருப்பு முருகானந்தம்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

தினகரனுடன் பேசியது உண்மைதான் என்றாலும் வேட்பாளர் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு பொன்.ராதாகிருஷ்ணன் தமக்கு தூது அனுப்பியதாக டி.டி.வி.தினகரன் கூறியிருக்கும் நிலையில், பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முயற்சி தோல்வியடைந்ததால் தவறான குற்றச்சாட்டை தினகரன் முன்வைப்பதாக பாஜக பதிலளித்துள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்  நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், பாஜகவின் சார்பில் கருப்பு முருகானந்தம் தம்மை தொடர்பு கொண்டதாக கூறினார். நெல்லை, குமரி தொகுதிகளில் சிறுபான்மை வேட்பாளர்களை நிறுத்துமாறு தம்மை பாஜக வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

மேலும், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, தமிழகத்தில் 37 தொகுதிகளை அமமுக வெல்லும் என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

பாஜகவுடன் இணக்கமாகும் முயற்சி தோல்வியடைந்ததால் தினகரன் தவறான குற்றச்சாட்டுகளை கூறுவதாக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார். தினகரனின் பேட்டி குறித்து பதிலளித்த அவர், தினகரனுடன் பேசியது உண்மைதான் என்றாலும் வேட்பாளர் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறினார்.

இதனிடையே தோல்வி பயத்தால் குறுக்கு வழியில் வெற்றிபெற பொன்.ராதாகிருஷ்ணன் முயலுவதாக கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் விமர்சித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனின் பேச்சு தேர்தல் நேரத்தில் திசை திருப்பும் நடவடிக்கை எனவும் இதில் உண்மை இருக்காது என தாம் கருதுவதாகவும். அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


இதனிடையே, டிடிவி.தினகரன் குற்றச்சாட்டுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தோல்வி பயத்தாலேயே தன்னை தேர்தலில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வலியுறுத்துவதாக கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

Also see... கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளர்! தினகரன்


Also see... கருணாநிதி பற்றி ஸ்டாலின் பேசியதைக் கேட்டு கண்கலங்கிய கனிமொழி





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: AMMK, BJP, Elections 2019, Kanniyakumari S22p39, Lok Sabha Election 2019, Lok Sabha Key Candidates, Ponradhakrishnan, Tamil Nadu Lok Sabha Elections 2019, TTV Dinakaran

அடுத்த செய்தி