முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று: ஆலோசனை கூறிய திமுக எம்.எல்.ஏ

நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று: ஆலோசனை கூறிய திமுக எம்.எல்.ஏ

குஷ்பு

குஷ்பு

குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேற்று மாலை வரை எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் தொடர்ந்து சளி பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது. மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்தேன், அதில் எனக்கு கொரோனா உறுதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகையும் பாஜக  செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

கொரோனா தொற்று மீண்டும் அசுர வேகத்தில் பரவத்தொடங்கியது. இந்தியாவில் கடந்த  ஜனவரி ஒன்றாம் தேதி 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருந்தது.   ஆனால் இன்று கொரோனா 1.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகமாகவே உள்ளது. இதனுடன் ஓமைக்ரான் திரிபு கொரோனாவும் பரவி வருகிறது.

மகேஷ் பாபு, திரிஷா, விஷ்ணு விஷால், சத்யராஜ், அருண் விஜய், மீனா, ஷெரின் இசையமைப்பாளர் தமன் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நடிகையும் பாஜக செய்தி தொடர்பாளருமான குஷ்புவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், இரு அலைகளுக்கு பிறகு தற்போது இறுதியாக 3வது அலையில் எனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வரை எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் தொடர்ந்து சளி பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது. மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்தேன், அதில் எனக்கு கொரோனா உறுதியானது.

எனவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தனிமையில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. எனவே அடுத்த 5 நாட்களுக்கு என்னை ட்விட்டரில் தொடர்ந்து பொழுதை போக்க உதவுங்கள். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் கொரோனா சோதனை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு - 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.. மாடுபிடி வீரர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் மருத்துவருமான எழிலன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தயவு செய்து கவனித்துக் கொள்ளுங்கள் மேடம் .. ஒரு கோவிட் சிகிச்சை மருத்துவர்  என்ற முறையில், ஒரு நாளைக்கு மூன்று முறை உங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டலைச் சரிபார்க்கும்படி அறிவுறுத்துகிறேன். அது 93 க்கு கீழே செல்லக்கூடாது.  நீங்கள் விரைவில் குணமடைய ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிங்க: புறநகர் ரயில்களில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்: பயணிகள் அவதி

First published:

Tags: BJP, Corona positive, Kushboo, Kushbu