விஜய் வீட்டில் நடந்த சோதனைக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை - இல.கணேசன்

விஜய் வீட்டில் நடந்த சோதனைக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை - இல.கணேசன்
நடிகர் விஜய்
  • Share this:
நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும் பாஜகவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் , பங்களாதேஷ் பிரிவினையின் போது பாதிக்கப்பட்ட இந்துகளுக்கு CAA சட்டத்தின் மூலம் பரிகாரம் செய்ய 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து நாட்டு நலனை நினைக்காமல் ஓட்டு நலனை கருத்தில் கொண்டு ஸ்டாலின் செயல்படுகிறார். இந்த போக்கு வன்மையாக கண்டித்தக்கது என தெரிவித்தார்.

மேலும் தைப்பூசத்திற்கு தமிழக அரசு விடுமுறை விட வேண்டும் என சீமான் கேட்பது வேடிக்கையானது. வேற்று மதத்தினர் விடுமுறை கேட்பது கண்டித்தக்கது என கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், TNPSC முறைகேடு அதிர்ச்சியளிக்ககூடியது. தேவைப்பட்டால் சிபிஜ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பேசிய அவர், விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறைக்கும் பிஜேபிக்கும் சம்பந்தமில்லை. மோடி அரசில் உப்பை தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என கூறினார்.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading