பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு - அப்போலோவில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவர்,  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு - அப்போலோவில் அனுமதி
இல கணேசன்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரையில், 4,20,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களைக் கடந்து முன்களப் பணியாளர்கள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இதுவரையில், தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவர், சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading