பா.ஜ.கவின் மூத்த தலைவராக உள்ள ஹெச்.ராஜா, கட்சிப் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டுவது போலவே கோயில் மீட்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் தீவிரமாக கவனம் செலுத்திவருகிறது. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறைக்கு எதிராக தீவிரமாக பேசிவருபவர். சமீபத்தில் பூந்தமல்லி மெட்ரோ திட்டத்துக்காக கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்த முயற்சி செய்வதற்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கோவிலுக்கு சொந்தமான நிலம் அரசுக்கு சொந்தமான நிலம் என நினைக்கிறார்கள் அப்படி அல்ல தனிநபர்கள் கோவிலுக்காக தங்களது நிலங்களை தானமாக எழுதி கொடுத்துள்ளனர்.
இந்த கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலம் மெட்ரோ ரயிலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தை தொட்டால் மிக பெரிய போராட்டம் வெடிக்கும். கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடக்கூடாது. இந்து கோவில்களை அழிப்பதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும் சேர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்’ என்று தெரிவித்திருந்தார்.
பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோவில் பகுதியில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா வருகை தந்தார் அப்போது அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லாததால் பழனி உட்கோட்ட காவல் எல்லை பகுதியான சத்திரப்பட்டியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் எச். ராஜாவை கைது செய்தனர்.
தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ் பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன்.
(சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன்.
இதுகுறித்த ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பதிவில், ‘தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ் பியால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன். (சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.