• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக கோயில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கக் கூடாது - பாஜக

தமிழக கோயில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கக் கூடாது - பாஜக

இப்ராஹிம்

இப்ராஹிம்

கோவில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கி விற்கக்கூடிய திட்டம் இந்து மத நம்பிக்கையை தரைமட்டம் ஆக்குவதற்கான மிகப்பெரிய சூழ்ச்சி.

  • Share this:
தமிழக கோயில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கக் கூடாது என்றும், உள்ளாட்சி தேர்தலில் திமுக சாதனைகளைச் சொல்லி வாக்குகள் பெற முடியாது என்பதால் சாராய பாட்டில்கள் வைத்தும் பணத்தை வைத்தும் வென்று விடலாம் என்று நினைக்கிறது எனவும் பாரதிய ஜனதா சிறுபான்மை அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

சிதம்பரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இன்றைக்கு தமிழகத்தில் நடக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தல் என்பது மக்களை ஏமாற்றக் கூடிய திமுக அரசு தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏழைப் பெண்கள் முதல் வணிகர்கள் வரை அனைவரையும் ஏமாற்றி மோசடி செய்து மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது.

அதனால் சாதனைகளைச் சொல்லி வாக்குகள் பெற முடியாது என்பதால் சாராய பாட்டில்கள் வைத்தும் பணத்தை வைத்தும் ஏழை மக்களிடம் கொடுத்து குறிப்பாக ஏழைகளாக உள்ளவர்கள் டாஸ்மாக் கடைகளில் நிரம்பி வழிகின்றன ஊழல் ஆச்சியின் மொத்த உருவமான திமுக ஆட்சி இதுபோன்று செய்வதை பாரதிய ஜனதா கட்சியினர் வன்மையாக கண்டிக்கிறோம்.

சிதம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக உயர்வு படுத்த வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது சிதம்பரம் நகராட்சி என்பது ஒரு மாநகராட்சிக்கு உள்ள அனைத்து உன் கட்டமைப்புகள் கொண்டுள்ளது அது சம்பந்தமாக கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நாளை மாவட்ட ஆட்சியரை அணுக உள்ளோம்.

தமிழகத்தை ஆளக்கூடிய திமுக அரசு தொடர்ந்து இந்து மக்களின் மத உணர்வுகளை இழிவு படுத்துவதும் இந்துமதத்தின் நம்பிக்கையை இழிவு படுத்தக்கூடிய  பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கப்படுத்துவது, தொடர்ந்து நடந்து வருவதை பார்க்க முடிகிறது.
கடந்த காலங்களில் எப்படி தேச விரோத கருத்துக்களை சட்டமன்றத்தில் பேசும் போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மென்மையாக அனுமதித்தார்கள் அதே போன்று இன்றைக்கு இந்து மத வழிபாட்டு தலங்களில் ஒரு பிரார்த்தனை அடிப்படையில் பல்வேறு நகைகளை காலங்காலமாக கோவில்களுக்கு அழைத்த நகைகளை இன்றைக்கு உருகி ரிசர்வ் வங்கியில் வைத்து வட்டி பணத்தை எடுத்து நாங்கள் செலவு செய்யப்போகிறோம் அதை கோவில் பராமரிப்பு செலவு செய்யப் போவதாக சொல்வது அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம்.

இந்து மதத்தின் நம்பிக்கைகளை கோவில்களை இவர்களால் நடத்த முடியாவிட்டால் அதை மக்களிடம் கொடுத்தால் அந்தந்த பகுதியில் உள்ள ஹிந்து மக்களே ஒவ்வொரு கோயில்களையும் நடத்திக் கொள்வார்கள். இது அரசு கையகப்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த கோவில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கி விற்கக்கூடிய திட்டம் என்பது இந்து மத நம்பிக்கையை தரைமட்டம் ஆக்குவதற்கான மிகப்பெரிய சூழ்ச்சியாக நாங்கள் கருதுகிறோம்.

கோவில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கக் கூடாது. அந்த எண்ணத்தை கைவிட வேண்டும். இல்லை என்றால் வருகின்ற ஏழாம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய திருக்கோவில்கள் முன்னால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிகக் கடுமையான போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். திமுக ஆட்சி என்பது இந்து மதத்தில் நம்பிக்கைக்கு எதிரானது மட்டுமல்லாமல் அனைத்து சமூகங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இந்த நேரத்தில் பதிவு செய்து கொள்கிறோம்.குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தொடர்ந்து மோசடியில் ஈடுபடுவதும் ரவுடி தனம் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் தொடர்ந்து கொண்டு உள்ளதை பார்க்க முடிகிறது. மக்களை ஏமாற்றுவது உடன் மட்டுமல்லாமல் தலித் சமுதாயத்தை பட்டியலின சமூக மக்களை தவறாக பயன்படுத்தி இரண்டு சாதிகளுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்த தொடர்ந்து திருமாவளவன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்ற உண்மை தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கிறது.

அதனால்தான் இன்றைக்கு இளைஞர்கள் தவறான முறையில் வழி நடக்கின்ற ஒரு சூழலும், மற்ற சாதிப் பெண்களை இவர்கள் கவர்ந்து திருமணம் முடிப்பது ஏதோ ஆண்மையின் அடையாளம் என்று தலைவரே பேசுவதும், தலித் மக்களுக்கு பட்டியலின மக்களுக்கு பெரிய வெட்கக்கேடான ஒரு தலைவராக திருமாவளவன் இருந்து வருகிறார். அதுபோன்ற ஒரு சூழலை கடுமையாக கண்டிக்கிறோம்.

சமீபத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை நான் பார்த்தேன் அதில் கூட இன்றைக்கு திருமாவளவன் என்ன காரியத்தை செய்து வருகிறார். தலித் மக்களை ஏமாற்றுகிறார் தலித் மக்களின் மத்தியில் பல்வேறு தவறான கருத்துக்களை பரப்பி பக்கத்தில் இருக்கக்கூடிய சாதியினருக்கு மத்தியில் மோதல் மொக்கை ஏற்படுத்துகிறார். அது போன்ற நிகழ்வுகள் அந்தத் திரைப்படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

ருத்ர தாண்டவம் என்பது பட்டியலின மக்களின் நியாயமான உணர்வுகளையும் அவர்களின் பாதிப்புகளையும் தெளிவாக காட்டுகிறது. அதேவேளையில் திருமாவளவன் போன்றவர்கள் இந்த பட்டியல் இன மக்களை வைத்து சாதிவெறியை உண்டாக்கி அந்த மக்களை கல்வி அறிவில் மேம் படுத்தாமல், மோசமான சூழல் அந்த சமூகத்திற்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த செயலை ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் காண்பித்துள்ளனர் அதனால் அந்த திரைப்படத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

சொல்லப்போனால் அந்த திரைப்படத்தில் இன்றைக்கு இருக்கின்ற திருமாவளவன் போன்ற ஒருவர் வரக்கூடிய காட்சிகூட உள்ளது. அவர்கள் எந்த நோக்கத்தில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அந்த படத்தை பார்க்கும் போது திருமாவளவன் எப்படி இன்றைக்கு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறார் என்பது போன்ற ஒரு காட்சி இருக்கக்கூடிய ஒரு சூழலை நாங்கள் பார்க்கிறோம். வெளிப்படையாக பட்டியல் இன மக்களை தவறாக பயன்படுத்தக் கூடிய காட்சி ருத்ர தாண்டவம் படத்தில் வைத்து உள்ளனர் அதனால் அந்த திரைப்படத்தை நாங்கள் வரவேற்கிறோம்.மொத்தத்தில் தமிழகத்தைப் பொருத்த அளவில் ஊழலுக்கும் மதவாதத்திற்கும் இந்துக்கள், இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் தொடர்ந்து முயற்சி செய்யக் கூடிய திமுகவும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் பொய்யான பரப்புரையை நாங்கள் முறியடிப்போம். தமிழகத்தில் தாமரை மலர வைப்போம் அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.

இந்நிலையில், அண்ணாமலை என கடவுளா என்று விழுப்புரம் மாவட்ட தலைவர் கூறியுள்ளார் அதனை பற்றி உங்கள் கருத்து என்ன என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியபோது, ஊடகங்கள் அடிப்படையாக ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். நாகரீக அரசியல் என்பது நான் பேசுகிறேன் என்றால் அதற்கு நீங்கள் எதிர்க் கேள்வி கேட்டால் நாகரீக அரசியல். ஆனால், இன்று அரசியல் எவ்வளவு கேவலமாக போய்விட்டது என்றால் ஒரு தனி மனிதனுடைய ஆடியோவை ஒட்டுக்கேட்டு அதைப் பரப்பி அதை வைத்து கேள்வி கேட்பது ஒரு தனி மனிதனுடைய வீடியோவை பரப்பி அவனது அந்தரங்கத்தை பரப்பி அதை வைத்து அதன் மூலம் அரசியலுக்கு எதிரான கேள்வி கேட்பது இதெல்லாம் ஒரு வெட்கக்கேடாக பார்க்கிறேன்.

தனி மனிதனுடைய வீடியோ ஆடியோ இரண்டு நபர்களுக்கு மத்தியில் பேசியது பொது வலைதளத்தில் வைத்து, அதை கேள்வி கேட்பது ஊடக தர்மத்திற்கு எதிரானது வெளிப்படையாக அதே யாரை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் அந்த நிர்வாகி வெளிப்படையாக பொதுத்தளத்தில் பேசினால் அதற்கு கட்சித் தலைமை பதிலளிக்கும்.

மத்திய அரசு பொதுவாக கொரோனா காலகட்டத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எல்லா மாநிலங்களுக்கும் கூறியுள்ளது, தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல. இருந்தாலும் கூட எந்த எந்த மாநிலத்தில் நோய்த்தொற்று குறைவாக உள்ளதோ, அந்தந்த மாநிலங்களில் இன்றைக்கும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறன. ஆந்திரா உட்பட பக்கத்தில் இருக்கின்ற கர்நாடகா மாநிலம் உட்பட பல மாநிலங்களில் பாண்டிச்சேரி உட்பட கோவில்களில் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

Must Read : சசிகலாவை தியாகத்தலைவி என்று அழைக்கக் கூடாது - ஜெயலலிதாவின் உதவியாளர்

தமிழகத்தில் மட்டும்தான் திட்டமிட்ட இப்படி மோசடி செயல் நடைபெறுகிறது. நாங்கள் நியாயமாக கேட்கிறோம். நீங்கள் சாராயக் கடைகளை மூடிவிட்டு, கோவிலும் இல்லை என்று சொன்னால் அது நியாயமான செயல். மாறாக, சாராயக் கடைகளில் கூட்டம் கூட்டமாக ஆட்களை வைத்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை குறைத்து நோயை பெருக்க வைத்து விட்டு, குளித்து புனிதமாக தூய்மையாக ஒரு இறைவனை வணங்கும் வருவதால் நோய்த்தொற்று அதிகமாகிவிடும் என்று சொல்வது களிக் கூத்து மட்டுமல்ல மத நம்பிக்கையை இழிவுபடுத்துவது. திமுக அரசு இதை திட்டமிட்டே செய்கிறது. இவ்வாறு கூறினார் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: